சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
1292 - தேன் இயல் சொற் (பொதுப்பாடல்கள்) Songs from this thalam பொதுப்பாடல்கள்
1292 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1093 )
தேன் இயல் சொற்
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானதனத் ...... தனதான
தேனியல்சொற் ...... கணிமாதர்
சேவைதனைக் ...... கருதாதே
யானெனதற் ...... றிடுபோதம்
யானறிதற் ...... கருள்வாயே
வானவருக் ...... கரசான
வாசவனுக் ...... கினியோனே
ஆனைமுகற் ...... கிளையோனே
ஆறுமுகப் ...... பெருமாளே.
Easy Version:
தேன் இயல் சொற்கு அணி மாதர் சேவை தனைக் கருதாதே
யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே
வானவருக்கு அரசான வாசவனுக்கு இனியோனே
ஆனை முகற்கு இளையோனே
ஆறு முகப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
தேனின் இனிமைத் தன்மையைக் கொண்ட, சொல்லழகு உடைய
பெண்களுக்குப் பணிவிடை செய்வதை நான் சிந்தியாது,
யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே ...
யான் எனது (அகங்காரம், மமகாரம்) என்னும் இரண்டு பாசங்களும்
நீங்குகின்ற ஞானத்தை நான் உணர்ந்து அறிந்துகொள்ள அருள்வாயாக.
வானவருக்கு அரசான வாசவனுக்கு இனியோனே ...
விண்ணோர்களுக்கு அரசனான இந்திரனுக்கு இனிய நண்பனே,
ஆனை முகற்கு இளையோனே ... யானை முகமுடைய
கணபதிக்குத் தம்பியே,
ஆறு முகப் பெருமாளே. ... ஆறு முகமுடைய பெருமாளே.
1
Similar songs:
தானதனத் ...... தனதான
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song